"சிவாயநம என சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை"
இந்த அடிகளை வலியுறுத்தும் வண்ணம், 'சிவனே கதி' என தம் அன்பினால் அவன் அடி வணங்கும் பக்தகோடிகள், தம் ஊனுறக்கம் துறந்து, தம் உடல் பொருள் ஆவிதனை சமர்ப்பித்து, ஆன்ம தூய்மை வேண்டிநிற்கும் நாள்தான் இந்த மகத்தான மகா சிவராத்திரி!
ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி(மாத சிவராத்திரி) வந்தாலும்கூட மாசிமாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில் வரும் நாளினையே நாம்
மகா சிவராத்திரியாக அனுஷ்டிக்கிறோம். காலையில் நீராடி கோயில் ஏகி வழிபாடு செய்து சிவன் சிந்தனையில் நாள்முழுதையும் கடத்துவது எல்லோருக்கும் எளிதான காரியமல்ல. மனதை கட்டுப்படுத்துவதென்பது இன்றைய இளம் சந்ததியினரிடம் மிககுறைவாகவே காணப்படுகிறது. எனினும் மன வலிமை கொண்டு அதை வெற்றி கொள்வதற்கு நாம் பழகிக்கொள்ள வேண்டும்.
இரவு முழுதும் கண் முழிப்பதற்க்காக சினிமா படங்களை பார்ப்பதென்பது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று.(எனக்கு அதில் சிறிதேனும் உடன்பாடில்லை) சிவன் நாமம் தாங்கிய பாடல்களை, பாமாலைகளை கேட்டும் , பஞ்சாட்சரத்தை ஜெபித்தும், மனத்தை சிவன்பால் செலுத்துவதே சாலச்சிறந்த வழியாகும்.
சிவனுக்குரிய விரதங்களில் மிகச்சிறப்பாக கருத்தப்படும் இவ்விரதநாளை, பல்வேறு புராணக்கதைகள் கொண்டு அதன் வலிமையை மேலும் வலுப்படுத்திய போதும்... இந்த நாளை சிறப்புற அனுஷ்டிக்கும் தத்துவமும் அதற்கான தாற்பரியமும் ஒன்றே !
சிறுவயதில் நான் படித்து அறிந்து கொண்ட சில கதைப்பின்னணிகள்....இவை
1) சிவன் பார்வதியை (இரண்டாம் முறையாக) மணந்த நாள்!
2) தேவர்களும் அசுரர்களும் அமுதைப்பெற பாற்கடலை கடைந்தபோது, வாசுகி எனும் பாம்பு உமிழ்ந்த நஞ்சை, தன் கண்டத்துக்குள் அடக்கி அருள் புரிந்த நாள் !
3) பிரம்மா - விஷ்ணு இருவரும், ஒளிப்பிழம்பின் அடி முடி தேடிய நாள் !
4) புலிக்குபயந்து வேடுவன் மரத்திலேறி, தான் தூங்காமல் இருப்பதற்காக வில்வம் இலை பறித்துப்போட்ட நாள் (மரத்தின் கீழ் லிங்கம் இருப்பதை அறியாமல்)
5) ஒரு சாபத்தை நீக்கும் பொருட்டு, ஆகாயத்திலிருந்து பூமிக்குள் கங்காதேவி பிரவாகமெடுத்த நாளும் அதை சிவன் தன் முடிக்குள் அடக்கிய நாளும் !
இப்படி இந்த மகத்தான நாளை மையப்படுத்தி இன்னும் கதைகள் ஏராளம்..ஏராளம்
'அன்பே சிவம்' எனும் தாரக மந்திரத்தை மொழியும் சைவம், தன்நெறி நின்றவர்களுக்கெல்லாம் சொல்லும் ஒரே விஷயம்
ஆன்மாவிற்கான பேரானந்தம் !
இப்பிறப்பின் பாவங்களை நீக்கி, ஆணவம் கன்மம் மாயையை கடந்து,
பாச பந்தங்களிலிருந்து விடுபட்டு, மீண்டும் பிறவா நிலை எய்தி, மோட்சத்துக்கு வழிகாட்டும் ஓர் புண்ணிய நாளாக விளங்கும் இந்நாளில், மனத்தால் சொல்லால் செயலால் சிவனை வழிபடும்போது, எல்லாம் கடந்த அந்த பரம்பொருளுடன் ஐக்கியமாகும் பாக்கியம் கிடைப்பதாக சைவர்களால் நம்பப்படுகிறது.
'மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்'
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf
5 comments:
Nandri for ur details abt Mahasivarathiri.
Unmayai solla ponaal marandhu poi irundha samayam sambandhamaana vishayangazhai ellaam nyabaha paduththi irukkireerhazh..mikka nandri pa
Oru nalla naalil pala nalla visayangal. nanraaga irukkirathu. Vaalththukkal.
Word verification neekki vidalaame.
comments poduvatharkku elithaaga erukkum.
Theriyaathu......appo.....Therium.....ippo... aduththathu....?
thanks for your info,, ivalo visayam irukaaaa......
Post a Comment