Tuesday, 24 February 2009

'ஆஸ்கார் நாயகனான இசைப்புயல்' - எல்லாப்புகழும் உனக்கே !

இது என் இசைநாயகனுக்காக(உலக ஞானம் காணத்தொடங்கிய வயது முதலே)

நேற்றே
இந்தப்பதிவினை நான் இட்டிருக்கவேண்டும் ஆனால் பிரார்த்தனைகள் காரணமாக முடியாமல்போனது......

என் உள்ளத்தின் எதிரொலிகள் உங்கள் உள்ளத்திலும்கூட எதிரொலித்திருக்கலாம்.
வாசித்துவிட்டு வாருங்கள் உங்கள் வரிகளோடு.....


இசையோடு வந்து, இசையோடு தவழ்ந்து, இசையை ஆத்மார்த்தமாக உணரத்தொடங்கிய என் ஒன்பதாவது வயதில், ஒய்யாரமாய் என் ஒவ்வொரு அணுவையும் உன் இசையால் வசியப்படுத்தி இன்றுவரை உன் இசைக்கட்டுக்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் இசைப்புயலே இது உனக்காக...


இன்று உலகம் முழுக்க ஒரே நாமம் - அது
இசையினால் ஆஸ்கார் மீட்டிய இசைப்புயலின் நாமம்!

பசிக்காக பத்து வயதில் கீ- போர்ட் ஏந்திய கரங்களுக்கு
பலதரப்பட்ட ஏமாற்றங்களை ஏய்த்து போராட்டங்களைப் புறந்தள்ளி
பதவிசாய்க்கிடைத்தது இன்று ஆஸ்கார் எனும் பத்தியம்!

பல்லாயிரக்கணக்கான தமிழ் இசை உள்ளங்களும் சேர்ந்தே-உன்னை
பந்தமாயும் சொந்தமாயும் கொண்டாட
பல்திசையும் எதிரொலிக்கிறது இசைக்கும் தமிழர்களுக்கும்
தரணியில் நீ தேடித்தந்த புகழ் !

(அதையும் வழமை போலவே இறைவனுக்கு சமர்ப்பித்துவிட்டான் அந்த நல்நெஞ்சக்காரன்....)


சின்ன சின்ன சாகசங்களை செய்துவிட்டு
மார்தட்டிக்கொள்ளும் மாந்தர்களுக்கு மத்தியில்.....
'சின்னச்சின்ன ஆசையுடன்' தேசிய அளவில் சிறகடித்து
தமிழ்த்திரை இசையின் தங்கமென தரம் குத்தப்பட்ட போதும்சரி,
தன் இசைப்பயணத்தில் மில்லியன் கணக்கான மக்களையும் இணைத்து
'தரம் என் இசையில் நிரந்தரம்' என்ற உன் மந்திரத்துக்கு ஏற்ப நாளுக்கு நாள்
புதுப்புது இசை நுணுக்கங்களை உத்திகளைப்புகுத்தி
புது இசைப்புரட்சி படைத்த போதும்சரி,
சர்வதேசத்தைத்தொட்ட விருதுகளை நீ தொட்டுதூக்கியபோதும்சரி,
நீ நீயாகவே இருந்திருக்கிறாய் ! இனியும் அப்படித்தான் .....

கணணி வித்தை காட்டியே நீ சாகசம் செய்கிறாய் என, உன்னை இழிந்த உள்ளங்களையும் இன்று உன் புகழ் பாட வைத்தாயே.....
அங்கே நிற்கிறாய் நீ !

எல்லோரும் சொல்கிறார்கள்...
"ஆஸ்கார் ரஹ்மானுக்கு பெருமை சேர்த்ததாம்"
இல்லை.......
ரஹ்மான் கரங்களுக்குள் புகுந்து கொண்டதால் ஆஸ்காருக்குத்தான் பெருமை பற்றிக்கொண்டது !
( ஹி ஹி ...வைரமுத்து மாதிரி கொஞ்சம் முயற்சி செய்தேனுங்கோ .....)

இவரைத்தொடர்ந்து இனி பட்டியலில் இணையப்போகும் உலகத்தமிழன் யார் ??
காத்திருக்கிறேன் ....


ஆஸ்கார் மேடையில் தமிழுக்கு பெருமை சேர்த்து எல்லோரையும் பரவசப்படுத்திய இசைப்புயல்


- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

11 comments:

Arul said...

Kamal Hassan sonnadhu pol Oscar oru American Virudhu thavira ulaha virudhu alla..aanalum Saadharanamaaha Americans pira naattavarhazhadhu kalayai potrum paangu kidayaadhavarhazh...appadi irundhum ARR vetri petradhu miha periya saadhanai aahum....Aduththa thamizh kalaignarhazh enum pozhudhu chance uzhzhavarhazh rende rendu peyar thaan..Ondru MIA aduththadhu Ulaha Naayahan Kamal Hassan :)

Sayanolipavan said...

ya, he excellent...my faivourate
and i wrote a post in russian language ..

A.Rhaman told-

All my life, I've had a choice of hate and love. I chose love and I'm here. God bless"

"Вся моя жизнь, я был выбор ненависть и любовь. Я выбрала любовь, и я здесь. Бог благословил"

good luck dyena akka. a good post..

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

Vathees Varunan said...

வாழ்த்துகள் டயான
நல்ல வரிகள்.
நன்றாக இருக்கிறது

Muniappan Pakkangal said...

Thank u Dyena for ur nice post on AR.Rahuman.You have correctly mentioned his simplicity.

வினோத் கெளதம் said...

வாழ்த்துகள் டயான
நல்ல வரிகள்.
நன்றாக இருக்கிறது..

butterfly Surya said...

வாழ்த்துகள் டயானா.

Anonymous said...

he is Excellent..........

Anonymous said...

Good one

எட்வின் said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

//சின்ன சின்ன சாகசங்களை செய்துவிட்டு
மார்தட்டிக்கொள்ளும் மாந்தர்களுக்கு மத்தியில்.....
'சின்னச்சின்ன ஆசையுடன்' தேசிய அளவில் சிறகடித்து//

நல்ல எழுத்தாள்மை

Anonymous said...

KAVITHAI CHINGIYE..... THODANGITIYA...MA...

I WAS WONDERING Y U STOPED WRITING POEMS...

NOW AGAIN...U HAD STARTED N IM VERY HAPPY ABOUT IT...

KEEP IT UP

OUR THALA ALWAYS ROCK...

SKY IS THE LIMIT FOR HIS ACHIEVEMENTS....

SANGEETHA